இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் புதிய வகை கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 53,135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 23,82,865 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 414 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து அங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71,567 ஆக உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 6-வது இடத்தில் உள்ளது.