ஆஸ்திரேலியா ஓபன் தற்போது நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் தலைசிறந்த வீரரும், 2-ம் நிலை வீரரான ரபேல் நடால், 4-ம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார்.
இதில் முதல் செட்டை ரபெல் நடால் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டையும் 6-2 எனக் கைப்பற்றினார். இதனால் நடால் எப்படியும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பாராதவகையில் சிட்சிபாஸ் நடாலுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இருவரும் அடுத்தடுத்து கேம்ஸ்களை கைப்பற்ற 3-வது செட் டைபிரேக்கர் வரை சென்றது.இறுதியில் சிட்சிபாஸ் 7-6 என 3-வது செட்டை கைப்பற்றினார். பின்னர் அதே வேகத்தோடு 4-வது செட்டையும் 6-4 எனக் கைப்பற்றினார்.வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினார். என்றாலும் சிட்சிபாஸ் 5-வது செட்டை 7-7 எனக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.முதல் இரண்டு செட்டுகளையும் கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற முடியாத ஏமாற்றத்தோடு ரபேல் நடால் வெளியேறினார்.