![](https://kannitamil.com/wp-content/uploads/2021/01/Rohitsahrma.jpg)
இந்தியா ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் தொடங்க உள்ள நிலையில் .
புத்தாண்டை முன்னிட்டு மெல்போர்னில் உள்ள உணவு விடுதிக்கு ரோகித் சர்மா, ஷுப்மன் கில், பிரித்வி ஷா, ரிஷப்பந்த், சைனி போன்றோர் சென்றார்கள்.
இந்நிலையில் அதே சமயத்தில் அங்கிருந்த நவால்தீப் சிங் என்கிற இந்திய கிரிக்கெட் ரசிகர், இந்திய வீரர்களுக்குத் தெரியாமல் அவர்களுடைய உணவு பில்லுக்கான கட்டணத்தைத் தானே செலுத்தியுள்ளார்.
இதையடுத்து உணவகத்தில் என்ன நடந்தது என்பதை அவர் டுவிட்டரில் விலாவாரியாகத் தெரிவித்தது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
டுவிட்டரில் நவால்தீப் சிங் தெரிவித்ததாவது:
நான் பில் தொகையைக் கட்டியது இந்திய வீரர்களுக்குத் தெரியாது. என்னுடைய சூப்பர் ஸ்டார்களுக்கான சிறிய பங்களிப்பு.
நான் தான் பில்லைக் கட்டினேன் எனத் தெரிந்தவுடன், அண்ணா காசு வாங்கிக்கோங்க, இல்லைனா நல்லா இருக்காது என என்னிடம் ரோகித் சர்மா சொன்னார்.
என்னை அணைத்து நன்றி சொன்னார் ரிஷப் பந்த் இப்படி அந்த ரசிகர் தனது டுவிட்டரில் விடியோவுடன் பதிவுட்டுள்ளார்
கிரிக்கெட் ரசிகருடைய இந்த டுவீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது . கொரோனா தடுப்பு விதிமுறைகளை இந்திய வீரர்கள் மீறியுள்ளதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைப்படி, விடுதியின் வெளிப்பகுதியில் மட்டுமே வீரர்கள் சாப்பிட வேண்டும். ஆனால் நவால்தீப் சிங் வெளியிட்ட விடியோவில், இந்திய வீரர்கள் விடுதியின் உள்ளே இருப்பது போலத் தெரிகிறது. மேலும் யாரும் முகக்கவசம் அணியவில்லை.
இந்நிலையில் இந்த விவகாரம் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் ரோகித் சர்மா, ரிஷப் பந்த் உள்ளிட்ட ஐந்து இந்திய வீரர்களும் தனிமைப்படுவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ரோகித் சர்மா, ரிஷப் பந்த், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய ஐந்து பேரும் விடுதிக்கு சாப்பிட சென்றது கொரோனா விதிமுறைகளை மீறியதா என்பதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் பிசிசிஐயும் விசாரணை செய்து வருகின்றன.
அதுவரை, இந்திய, ஆஸ்திரேலிய மருத்துவக் குழுவின் அறிவுரையின்படி, ஐந்து வீரர்களும் தனிமைப்படுத்தளுக்கு உள்ளாவர் . 5 பேரும் இந்திய வீரர்களுடன் இணைந்து பயணம் செய்வதோ பயிற்சி மேற்கொள்ளவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐந்து வீரர்களும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஒன்றாகப் பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .