இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவிளையாடி வருகிறது.
இரு அணிகள் மோதும் 4 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. 2-வது இன்னிங்சில் வெறும் 36 ரன்னில் சுருண்டது.
2-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.
இதற்கிடையே இந்திய அணி கேப்டன் வீராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு கோலி நாடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி வீராட் கோலி ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.