ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாமுக்குள் துப்பாக்கி சூடு 12 ராணுவ வீரர்கள்பலி .

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெரட் மாகாணத்தில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. இந்த முகாமில் 14 ராணுவ வீரர்கள் தங்கியிருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த முகாமில் இருந்த 2 ராணுவ வீரர்கள் திடீரென தங்களது சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். என்ன நடக்கிறது என சக வீரர்கள் சுதாரிப்பதற்குள் அந்த 2 வீரர்களும் அவர்களை சுட்டு தள்ளினர். இதில் 12 வீரர்களும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர்.பின்னர் அங்கிருந்து அவ்விருவரும் தப்பிச்சென்றனர் இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *