அ.தி.மு.க.வை வீழ்த்த தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தொண்டர்கள் பணியாற்றுவார்கள்-அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும்-தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் எல்.கே. சுதீஷ்

அதிமுக கூட்டணி உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதையடுத்து தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் எல்.கே. சுதீஷ் கூறியதாவது ‘‘அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியதால், இன்று எங்கள் அனைவருக்கும் தீபாவளி. அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும். அ.தி.மு.க.வை வீழ்த்த தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தொண்டர்கள் பணியாற்றுவார்கள்.அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பா.ம.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *