அமெரிக்க துருப்புகள் வரும் செப்டம்பர் 11-ந்தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுகிறது

தலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மற்றும் பென்டகன் மீது விமானத்தை மோதச் செய்து பயங்கரவாத நாசவேலையில் ஈடுபட்டனர். இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா தலிபான் தலைவன் பின்லேடனை சூறையாட ஆப்கானிஸ்தான் மீது குண்டுகளை வீசியது. இறுதியாக பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடன் சுட்டு வீழ்த்தப்பட்டார். அத்துடன் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை அகற்றி தேர்தல் நடத்தி அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலிபான் அதிகாரத்தை ஒடுக்க அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் குவித்தது. தற்போது ஆப்கானிஸ்தானில் முன்பு போன்று கலவரம் வெடிக்காமல், அமைதி திரும்பி வருகிறது.இதற்கிடையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, அமெரிக்க துருப்புகள் தலிபானுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. அதில் அடுத்த மாதத்துடன் அமெரிக்க துருப்புகள் முற்றிலுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது.ஆனால் தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடன் மே மாதம் முற்றிலுமாக வெளியேறுவது கடினம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட 20-ம் ஆண்டு நினைவு தினம் செப்டம்பர் 11-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்று அனைத்து துருப்புகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் என்பதை ஜோ பைடன் அறிவிக்க இருக்கிறார் என அதிரிகார்கள் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *