![](https://kannitamil.com/wp-content/uploads/2021/01/Ayatollah_Ali_Khamenei.jpg)
அமெரிக்கா, இங்கிலாந்திலிருந்து ஈரானுக்கு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அந்த நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். இந்த இரு நாடுகளும் நம்பகமானவை அல்ல என கூறிய அவர் பிரெஞ்சு தடுப்பூசிகளும் நம்பகமானவை அல்ல என தெரிவித்தார். உலக நாடுகளை தொடர்ந்து அச்சறுத்தி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. இதனால் பல நாடுகள் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டன. ஈரான் நாட்டிலும் தடுப்பூசி தயாரிக்கபட்டு பரிசிசோதனையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலிருந்து ஈரானுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அந்த நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரையாற்றிய அயதுல்லா அலி கமேனி கூறியதாவது:- அமெரிக்க மற்றும் இங்கிலாந்து கொரோனா தடுப்பூசிகள் ஈரானுக்கு இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளும் நம்பிக்கைக்கு உரிய நாடுகள் அல்ல. பிரான்சின் எச்.ஐ.வி-கறைபடிந்த இரத்த விநியோகங்களுடனான பிரெஞ்சு தடுப்பூசிகளும் நம்பகமானவை அல்ல. ஈரானிய கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு பெருமைக்கான ஆதாரமாகும். அமெரிக்காவில் ஆட்சி அமைக்க உள்ள ஜோ பிடன் நிர்வாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு எந்த அவசரமும் அவசியமும் இல்லை. ஆனால் அமெரிக்கா எங்கள் மீதுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கும் பட்சத்தில் , ஈரான் பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.