சாரா சிமென்டல் வயது 18 , பிராங்போர்டில் உள்ள லிங்கன்-வே கிழக்கு உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெறவிருந்தார்.கடந்த 16 ம் திகதி லேசான தலை வலியுடன் வீட்டுக்கு வந்த சாராவுக்கு
ஒரு கிழமைக்கு பிறகு உடல்வலியுடன் சளியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டதைத் தொடர்ந்து சாரா அங்குள்ள சில்வர் கிராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது பின் மேற் சிகிச்சைக்காக கடந்த 25 ம் திகதி சிக்காகோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆனாலும் சிகிச்சை பலனளிக்கமால் கடந்த 26 ம் திகதி சாரா உயிரிழந்தார்.சாரா சிமென்டல் நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருந்தார் என அவரது பெற்றோர்கள் கூறியுள்ளனர் .