அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலை 4 மணிக்கு ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு கர்ப்பிணிப்பெண் உட்பட 5 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தனர். கர்ப்பிணிப் பெண் வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்ற அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் ஆனால் துரதிஷ்டவசமாக குழந்தையும் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது பெரும் படுகொலை என மாநகர மேயர் ஜோ ஹாக்செட் தெரிவித்துள்ளார்.