உலக அளவில் கொரோனா உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2.33 கோடியை தாண்டியுள்ளது.கொரோனா வைரசால் ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.89 லட்சத்தைத் தாண்டியுள்ளது.