அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்று கடந்த ஜூன் 25-ம் தேதி இடிந்து விழுந்தது. 12 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. 150க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், மியாமியில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.இதுதொடர்பாக மாயமானவா்களின் குடும்பத்தினரிடம் மியாமி-டேட் நகர மேயா் டேனியலா லெவைன் காவா கூறியதாவது:
அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியிலிருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, விபத்தில் 90 பேர் உயிரிழந்தது அதிகார பூா்வமாக உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மிகவும் வேதனை அளிக்கக் கூடியது.இடிபாடுகளில் சிக்கியுள்ள உடல்களை மீட்பதற்கான பணிகளை அவசரமாக மேற்கொள்ள மீட்புக் குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.