அமீரக துணை அதிபர் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து வீடியோ மூலம் ட்விட்டரில் பதிவு

அமீரக துணை அதிபர் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் சில கருத்துகளை அவ்வப்போது வீடியோ மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்றும் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் தனது வாழ்க்கை அனுபவம் குறித்தும், தனது பதவியின் மூலம் கிடைத்துள்ள அனுபவத்தை பற்றியும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது நாம் மேற்கொண்டு வரும் பணிகளில் முடிவு என்று எதுவும் இல்லை. தொடர்ந்து நமது பொறுப்பில் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இந்த வாக்கியம் எவ்வளவு உண்மை என்பதை நாம் தினமும் அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.ஒவ்வொருவருக்கும் பல்வேறு கனவுகள் தங்களது வாழ்க்கையில் இருந்து கொண்டே இருக்கும். இந்த கனவுகள் அனைத்தையும் நிஜமாக்குவது ஒரு தலைவருக்கு மட்டுமே உள்ள பண்பாகும். பலரும் வாழ்க்கையில் பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருவர்.ஒருவர் வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்பது அவர் எந்த ஒரு சவாலையும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே ஆகும்.இவ்வாறு அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.ஒரு சில நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவானது துணை அதிபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவை துபாய் ஊடக அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.இதனை பார்வையிட்டு பொதுமக்கள் பலரும் துணை அதிபருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *