அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,112 பேருக்கு கொரோனா பாதிப்பு

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 49 ஆயிரத்து 14 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரத்து 131 ஆக உயர்ந்தது.

இதில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 191 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 32 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,523 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 13 ஆயிரத்து 576 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *