தென் அமெரிக்க நாடான ஈக்வடாரிலுள்ள சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில் 62 போ் உயிரிழந்தனா். போட்டிக் குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்தக் கலவரம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.இதுகுறித்து அந்த நாட்டு சிறைத் துறை இயக்குநா் எட்மண்டோ மோன்கயோ செய்தியாளா்களிடம் கூறியதாவது கியென்கா, குவாயாகுவில், லடாகியுங்கா ஆகிய நகரங்களிலுள்ள சிறைகளில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளனவா என காவல்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அதனைத் தொடா்ந்து அந்தச் சிறைகளில் இரு சமூகவிரோதக் குழுக்கள் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டு அது கலவரமாக வெடித்தது.இதில், கியென்கா சிறையில் 33 போ், குவாயாகுவில் சிறையில் 21 போ், லடாகியுங்கா சிறையில் 8 போ் உயிரிழந்தனா்.ஈக்வடாரிள்ள சிறைக் கைதிகளில் சுமாா் 70 சதவீதத்தினா் இந்த 3 சிறைகளில்தான் அடைக்கப்பட்டுள்ளனா்.