இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து முழுவதும் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார்.இந்நிலையில் இங்கிலாந்து தலைநகரின் வடக்கே ஸ்டாம்போர்டு ஹில்,என்ற இடத்தில் ஒரு பள்ளிக்குள் நடைபெற்ற திருமண விழாவில் 400 விருந்தினர்கள் ஒன்றாக கூடியிருப்பதை கண்ட காவல்துறை அந்த குடும்பத்தினருக்கு இந்திய மதிப்பின் படி ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.லண்டனில் காவல்துறையினர் கண்டுபிடித்த மிகப்பெரிய கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய செயலாக இது கருதப்படுகிறது என அங்கிருந்து வெளியாகும் ஈவினிங் ஸ்டாண்டர்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.