ராஜபக்சேவின் இன்னொரு தம்பியான பசில் ராஜபக்சே மந்திரி ஆனார்

இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அதிபராகவும், மகிந்த ராஜபக்சே பிரதமராகவும் உள்ளனர். அவர்களின் தம்பி சாமல் ராஜபக்சே, வேளாண் மந்திரியாக உள்ளார்.இந்தநிலையில், ராஜபக்சே சகோதரர்களில் மிகவும் இளையவரான பசில் ராஜபக்சேவும் நேற்று மந்திரி ஆனார். அவருக்கு நிதி இலாகா அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை நிதி இலாகாவை மகிந்த ராஜபக்சே கவனித்து வந்தார். அவருக்கு பொருளாதார கொள்கை, திட்ட அமலாக்கம் ஆகிய புதிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பசில் ராஜபக்சே, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இருப்பினும், ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் பதவி விலகியதால், அந்த இடம் மூலமாக பசில் ராஜபக்சே எம்.பி. ஆகியுள்ளார். அவர் பல்வேறு சிறப்பு குழுக்களுக்கு தலைவராக இருந்துள்ளார். அவர் அரசியல் வியூகம் வகுப்பதில் வல்லவராக கருதப்படுபவர். அமெரிக்கா, இலங்கை என இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார்.பசில் ராஜபக்சே மந்திரி ஆனதன் மூலம், இலங்கை அரசில் ராஜபக்சே குடும்பத்தின் பிடி மேலும் வலுத்துள்ளது. மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல், சாமல் ராஜபக்சேவின் மகன் ஷாசிந்திரா ஆகியோரும் மந்திரிகளாக உள்ளனர். மகிந்த ராஜபக்சேவின் மருமகன் நிபுணா ரணவாகாவும் அரசு பதவியில் இருக்கிறார்.இதன்மூலம், ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அரசின் உயர் பொறுப்புகளை வகிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *