விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த மாஸ்டர் படம் 50% வீத இருக்கைகளுடன் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்று பத்து நாட்கள் ஆகிறது. இந்த பத்து நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் உரிமையை முன்னணி நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது மாஸ்டர் படத்திற்கு குறிப்பிட்ட சில நகரங்களைத் தவிர மற்ற இடங்களில் ரசிகர்கள் வருகை சற்று குறைந்துவிட்டதால் .இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதாலும் அடுத்த வாரம் குடியரசு தினம், தைப்பூசம் ஆகிய நாட்களில் விடுமுறை தினம் என்பதாலும் அதுவரையிலும் தியேட்டர்களில் படத்தை ஓட்ட திட்டமிட்டுள்ளார்களாம். அதன்பிறகு எப்படியும் தியேட்டர்களில் மக்கள் வருகை மிகவும் குறைந்துவிடும். அதைக் கணக்கில் கொண்டு மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.