2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்த இலங்கை அரசாஙகத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் வரும் புதன்கிழமை பதிலளிக்கும் என தெரிவித்துள்ள வெளிவிவகார செயலாளர் இதுவரை நிறைவேற்றியுள்ள வாக்குறுதிகள் குறித்தும் அரசாங்கம் பதிலளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு எதிராக இன்னொரு தீர்மானத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இலங்கைக்கு ஆதரவளிக்க நட்பு நாடுகளையும் ஒத்த நிலைப்பாடுகளை கொண்ட நாடுகளையும் கேட்டுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.