கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், துருக்கி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 891 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 48 லட்சத்து 20 ஆயிரத்து 591 ஆக உள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி துருக்கி ஐந்தாம் இடத்தில் உள்ளது.
ஒரே நாளில் 394 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 43.23 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 4.56 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.