மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. பல்வேறு தரப்பு கிளர்ச்சியாளர்கள் பிரிவுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல்களின் போது கிளர்ச்சியாளர்கள் நடத்து தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.இந்நிலையில், அந்நாட்டின் இடுரீ மாகாணத்தில் உள்ள அபிமீ என்ற கிராமத்திற்குள் நுழைந்த ஏடிஎஃப் என்ற கிளர்ச்சிப்படையினர் கிராமத்தில் இருந்த பொதுமக்கள் மீது சராமரியாக துப்பாக்கி சுடு நடத்தினர் இதில் 46 அப்பாவி பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர் பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற கிளர்ச்சியாளர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.