இலங்கையில் தலைவர் பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றிய தமிழ் இளைஞன் கைது

இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் காணொளியொன்றினை ´டிக் டொக்´ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டுள்ளாார்.வத்தளை பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யபபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

25 வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுளளதாக அவர் மேலும் தெரிவித்தார்.முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த குறித்த தமிழ் இளைஞன் பின்னர் ஹட்டனில் வசித்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.அவரின் கைப்பேசியயை சோதனையிட்டதில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பல்வேறு செய்திகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *