இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதற்கிடையில் இந்திய அணி இலங்கை சென்று தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட முடிவு செய்தது.விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாததால் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை பிசிசிஐ-க்கு ஏற்பட்டது.இந்த நிலையில் இன்று இரவு இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.