ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணத்தில் பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஷிர்ஷாத் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த பயங்கரவாதிகள் அதை ராணுவ தளத்தின் நுழைவாயில் முன்பு நிறுத்தி வெடிக்கச் செய்தனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.இந்த குண்டுவெடிப்பில் 14 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் கடந்த காலங்களில் இதுபோன்ற தாக்குதல்களை தலீபான் பயங்கரவாதிகள் நடத்தி இருப்பதால் இந்தத் தாக்குதலின் பின்னணியிலும் அவர்களே இருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. தலீபான் பயங்கரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தான் அரசும் கத்தார் தலைநகர் தோஹாவில் 3 மாதங்களுக்கு மேலாக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.