இலங்கையில் ஒரே நாளில் 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 239,669 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களில் 201,389 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,581 ஆக அதிகரித்துள்ளது.
