மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 159 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. தி.மு.க. மட்டுமே தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தி.மு.க. தனி மெஜாரிட்டி பெற்றது. இதையடுத்து தி.மு.க. ஆட்சி அமைக்கிறது. மு.க.ஸ்டாலின் 7ந் தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.தமிழக முதல்வராக 7ந்தேதி ஸ்டாலின் பதவியேற்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *