அற்புதமான வெற்றிக்கு திமுகவுக்கு வாழ்த்துகள்-நடிகர் விஷால்

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. இறுதியில் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.இதனைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் நடிகர் விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “இந்த அற்புதமான வெற்றிக்கு திமுகவுக்கு வாழ்த்துகள்.அன்பு நண்பர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோருக்கு நன்றி. நம் முதல்வர் மு.க.ஸ்டாலினை வருக வருக என வரவேற்கிறேன்.

அடுத்த சில வருடங்களில் நமது தமிழகத்துக்கு நல்ல விஷயங்கள் கிடைத்துச் செழிக்கட்டும். உடைந்து போயிருக்கும் நமது திரைத்துறைக்கும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று பதிவு செய்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *