மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் மகத்தான வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்-நடிகர் சித்தார்த்

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. இறுதியில் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.இதனைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.நடிகர் சித்தார்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது “ஜெயலலிதாவுக்குப் பிறகு நம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர்.மகத்தான வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். எங்கள் அனைவரின் நலனுக்கு நீங்கள் நல்ல ஆட்சியைக் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். எதிர்பார்ப்புகளோடும் கேள்விகளோடும் உங்களைப் பார்க்கிறோம். வாழ்க தமிழ்”. இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *