எதிர்பார்த்தது போல் விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

விவேக் மரணமடைந்தபோது நடிகர் விஜய் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றிருந்ததால், விவேக்கின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை.இதனால் நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் விவேக் குடும்பத்தினரை நேரில் சந்திப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில்  ‘தளபதி 65’ படப்பிடிப்பு முடிந்து நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பினார் நடிகர் விஜய்.இன்று காலை நடிகர் விவேக்கின் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய், அங்கு விவேக்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நடிகர் விஜய்யும், விவேக்கும் ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *