மாஸ்டர் மகேந்திரன் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் . இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.சமீபத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில், மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து எல்லோராலும் பாராட்டப்பட்டார் மகேந்திரன்.இந்நிலையில், மாஸ்டர் மகேந்திரன் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த காரின் சாவியை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையால் வாங்கி இருக்கிறார். மேலும் புதிய ஆண்டு, புதிய வாழ்க்கை, புதிய பயணம் எல்லாம் மாஸ்டரில் இருந்து தொடங்கியது என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் மாஸ்டர் மகேந்திரனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
New year, New life , New journey , everything started from my one and only MASTER 🖤
Love you @Dir_Lokesh na ❤️
Thank you @NexaExperience @Maruti_Corp for ur good service and hospitality 🤝 Loved the work you people do 🤜🤛 pic.twitter.com/N5uVJbB9eZ
— Master Mahendran 🔱 (@Actor_Mahendran) April 8, 2021