தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகுபலி காலமானார்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜான் மகுபலி காலமானார்.கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக எந்தவொரு பொது நிகழ்ச்சியில் எதுவும் கலந்து கொள்ளாமல் ஜான் மகுபலி இருந்தார். இதனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக யூகங்கள் பரவின.இந்நிலையில், ஜான் மகுபலி உயிரிழந்ததாக தான்சானியா நாட்டு துணை அதிபர் சமியா சுலுஹு ஹாசன் அறிவித்தார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 12-ம் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இருதய பாதிப்புக்கு மார்ச் 12-ம் தேதி முதல் ஜான் மகுபலி சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *