தி.மு.க. கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு

அதேபோல், தி.மு.க. கூட்டணியில் ஆதித் தமிழர் பேரவைக்கும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், “ஒதுக்கீடு செய்த 1 சட்டமன்றத் தொகுதியில் ஆதித் தமிழர் பேரவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்” எனத் தெரிவித்தார்.தி.மு.க. கூட்டணியில் மக்கள் விடுதலைக் கட்சிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒதுக்கப்பட்டுள்ள 1 சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் மக்கள் விடுதலைக் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் முருகவேல் ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதனிடையே, தி.மு.க.வுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்திய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், “தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சிமன்றக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *