மக்கள் நீதி மய்ய கட்சியின் தொடக்க விழா நாளை நடக்க உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் கமல் சந்திப்பு

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு சென்ற கமல்ஹாசன், ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் சுமார் 45 நிமிடங்கள் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மக்கள் நீதி மய்ய கட்சியின் தொடக்க விழாவை அரங்க நிகழ்ச்சியாக நாளை காலை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி உள் அரங்கத்தில் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.ரஜினி கட்சி தொடங்காத நிலையில், அவரை சந்தித்து ஆதரவு கேட்பேன் என கமல்ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.நாளை தொடக்க விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் மாலையில் பத்திரிகையாளர்களை கமல் சந்திக்கிறார். அப்போது தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி? எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது? போன்ற முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *