மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய, பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 9-ந் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
“The Soul of Justice never dies.”
With great delight,sharing with you the much awaited first look of #Karnan & the release date.@theVcreations @dhanushkraja @Music_Santhosh @thenieswar @EditorSelva @RamalingamTha @thinkmusicindia @LaL_Director @rajishavijayan @KarnanTheMovie🐘 pic.twitter.com/lrrzGajITj— Mari Selvaraj (@mari_selvaraj) February 14, 2021