லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர்திரைப்படம் இன்று திரை அரங்கங்களில் வெளியான நிலையில், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.
மேலும் இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக திரைஅரங்கங்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது
இந்நிலையில், மாஸ்டர் படம் இன்று வெளியாகி ரசிகர்களுக்கு, உற்சாகத்தை கொடுத்துள்ளது . படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கு காட்டப்பட்டது . அப்போது விஜய்யின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர்.