
இயக்குநர்கள் வெற்றி மாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கதைக்கருவை மையமாக வைத்து “பாவக்கதைகள்” என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கினார்கள். ஓடிடி தளத்தில் வெளியாகிய இந்தப் படம், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. சாதிப் பெருமை, குடும்ப கௌரவம் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள் மற்றும் இழப்புகள் குறித்து பேசும்படியாக இதன் ஒவ்வொரு கதையும் அமைந்திருந்தது.அதிலும் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சாந்தனு, காளிதாஸ் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘தங்கம்’ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மூன்றாம் பாலினத்தவர் பற்றிய இந்தக் கதை, பார்வையாளர் மனதை உருக்கியது. குறிப்பாக மூன்றாம் பாலினத்தவராக நடித்த நடிகர் காளிதாஸ் ஜெயராம் ரசிகர்களிடம் சிறப்பான பாராட்டுகளைப் பெற்றார்.