அமெரிக்காவில் வீட்டின் கூரை மீது விமானம் விழுந்து 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் வீட்டின் கூரை மீது சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில்

விமானத்தில் இருந்த ஒரு விமானியும், 2 பயணிகளும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேசமயம் விமானம் விழுந்த வீட்டில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *