நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் – என கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு

நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவர் நலமாக உள்ளார் எனவும் இன்று இரவு மருத்துவமனையில் இருப்பார் எனவும் அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல்நலமடைந்து விரைவில் குணமடைய ரசிகர்கள், சினிமா துறையினர், அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தி ல் வெளியிட்டுள்ள பதிவில்,

’நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *