இலங்கை மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும்,
அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ , உணவு வசதிகளோ ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.
இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிடடார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின்
இத்தகைய நிலைமை தொடர்பில் நேரில் ஆராயுமாறு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரகத்துக்கு முறையீடு செய்துள்ளார் எனவும் அவர் கூறினார்.