கொழும்பு மகசின் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பத் தயாராகியிருந்த நிலையில் தமிழ் அரசியல் கைதியான யாழ்.பல்கலைக்கழக இசைத் துறை விரிவுரையாளர் நல்லை க.கண்ணதாஸ் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை அவருடைய வழக்கு விசாரணையை முன்னெடுக்கும் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்
இதேவேளை கண்ணதாஸுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மகசின் சிறைச்சாலையில் இடம்பெற்று வருகின்றன என்றார்.