சிங்கப்பூரில் இன்று புதிதாக 17 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கி இருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,403 ஆக உயர்ந்ததுள்ளது.