வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்த ராகவா லாரன்ஸ்

பொல்லாதவன், ஆடுகளம் படங்களை ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்த கதிரேசனும், காக்கா முட்டை, விசாரணை, வடசென்னை படங்களை கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் தயாரித்த வெற்றிமாறனும் இணைந்து அதிகாரம் என்னும் படத்தை தயாரிக்கிறார்கள்.

இதில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் அதிகாரம் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்க இருக்கிறது. மலேசியாவில் சுமார் 50 நாட்களும் இந்தியாவில் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *