செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 20 சதவீத சம்பளம் கட்

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் கே.எல். ராகுல் சதம் விளாசி அசத்தினர். மேலும், செஞ்சூரியனில் வெற்றி பெற்ற முதல் ஆசிய நாடு என்ற பெருமையை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பெற்றுள்ளது.இந்திய அணி வீரர்கள் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், சற்று வருத்தம் அடையும் வகையில் மெதுவாக பந்து வீசியதன் காரணமாக ஐ.சி.சி. வீரர்களுக்கு 20 சதவீதம் அவர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் வகையில் அபராதம் விதித்துள்ளது.

குறிப்பிட்ட நேரத்திற்குள் 1 ஓவர் குறைவாக வீசப்பட்டதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.போட்டிக்கான நடுவர்கள் அளவிலான குற்றச்சாட்டில், விராட் கோலி மெதுவாக பந்து வீசியதை ஒத்துக்கொள்ள, அதற்கு மேல் இதுகுறித்து விசாரிக்க தேவையில்லை என்பதுடன் இந்த விவகாரம் முடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *