தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று . இதில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.இந்நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி திடீரென விலகியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. மேலும், இந்திய அணியின் கேப்டனாக நீண்ட நாளாக பணியாற்ற வாய்ப்பு அளித்தமைக்காக பிசிசிஐக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
— Virat Kohli (@imVkohli) January 15, 2022