கன்னித்தமிழின் குலு குலு திரைவிமர்சனம்

இளம் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் முதல் முறையாக சந்தானம் நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் குலு குலு. இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரத்னகுமார் மற்றும் சந்தானத்தின் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை குலு குலு படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பார்க்கலாம்..

அமேசான் காட்டில் பிறந்த கூகுள் (சந்தானம்) அங்கு ஏற்படும் பிரச்சனைகளின் காரணமாக தனது தாய்யை இழக்கிறார். இதுமட்டுமின்றி அங்கிருந்து கடற்கொள்ளையர்களால் கடத்தப்படும் கூகுள் வெவ்வேறு நாட்டில் நாடோடியாக பயணம் செய்து இளைஞன் ஆனதும் சென்னையில் தனக்கென்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கேயே வாழ்ந்து வருகிறார்.உதவி என்று யார் வந்து கேட்டாலும் எதையும் எதிர்பார்க்காமல் செய்கிறார் கூகுள். இப்படி சென்றஇடமெல்லாம் யாருக்காவது உதவி செய்துகொண்டே இருக்கும் கூகுளிடம் ஒரு நாள், தங்களது நண்பன் கடத்தப்பட்டுவிட்டான் என்று கூறி உதவி கேட்டு சில இளைஞர்கள் வருகிறார்கள்.

உடனடியாக அவர்களுக்கு உதவி செய்ய புறப்படும் கூகுள், இந்த பயணத்தில் அந்த இளைஞர்களுடன் இணைந்து அவர்களுடைய நண்பனை கண்டுபிடித்தாரா? இல்லையா? இந்த பயணத்தில் அவர் சந்தித்த இன்னல்கள் எல்லாம் என்னென்ன? என்பதே படத்தின் கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *