இந்திய,தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முன்னிலை

இந்திய, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதுகுவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தென்னாப்பிரிக்க அணியில் மேர்கோ ஜேன்சன் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.இன்றைய 2வது நாள் ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் திணறினர். முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பீட்டர்சன் 62 ரன்களும், டெம்பா பவுமா 51 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் சிறப்பாக பந்து வீசி, 61 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2ம் இன்னிங்சை தொடங்கியது. அணித் தலைவர் கே.எல் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வால் 23 ரன்களில் ஆட்டமிழந்தர். 2- ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை விட இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 35 ரன்களுடன், ரகானே 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர். நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *