25 நாட்களுக்குப் பின் மாநாடு படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இதில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் நடிகர் செல்வராகவன் மாநாடு படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘தாமதமாய் ‘மாநாடு’ பார்த்ததிற்கு மன்னிக்கவும். ரசித்து பார்த்தேன். சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா அருமை. நண்பர்கள் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி’ இவ்வாறு செல்வராகவன் பதிவு செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *