கன்னித்தமிழின் திரை விமர்சனம்- ‘அண்ணாத்த’

அநியாயத்தை தட்டிக்கேட்கும் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த். மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் இவர், தங்கை கீர்த்தி சுரேஷ் மீது அளவற்ற பாசம் வைத்திருக்கிறார். வெளியூரில் படிக்கும் தங்கை கீர்த்தி சுரேஷ் விடுமுறையில் ஊருக்கு வரும்போது திருவிழா போல் கொண்டாடுகிறார். இதேபோல் கீர்த்தி சுரேஷும் அண்ணன் மீது பாசமழை பொழிகிறார்.

உயிருக்கு உயிராக இருக்கும் தங்கைக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை தேடுகிறார். ஒரு வழியாக மாப்பிள்ளையை கண்டுபிடித்து திருமணம் செய்து வைக்கும் நிலையில் பிரச்சனை ஏற்படுகிறது.இறுதியில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

காளையன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ரஜினிகாந்த். தனக்கே உரிய பாணியில் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். ஊர் மக்களுக்கு போராடுவது, தங்கை மீது பாசம் காட்டுவது, எதிரிகளை துவம்சம் செய்வது, நயன்தாராவுடன் ரொமான்ஸ் என்று திரையில் ஜொலிக்கிறார்.

தங்கையாக வரும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அண்ணன் மீது பாசம், காமெடி என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.வழக்கறிஞராக வரும் நயன்தாரா, அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். ரஜினியுடன் நடிக்கும் காட்சிகளில் ரசிக்க வைத்து இருக்கிறார். குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். வில்லனாக வரும் ஜெகபதி பாபு கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும், ரஜினிக்கேற்ற கதைக்களத்துடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சிவா. முதல் பாதியை ரசிகர்களுக்கு ஏற்றவாறு கமர்ஷியலாக கொடுத்து இருக்கிறார்.இடைவேளைக்கு 10 நிமிடத்திற்கு முன்பாக கதைக்குள் அழைத்து செல்லும் இயக்குனர், பிற்பாதியில் ரசிகர்களை கட்டிப் போட முயற்சி செய்திருக்கிறார். தேவையற்ற காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவோடு திரையில் பார்க்கும் போது கலர்புல்லாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘அண்ணாத்த’ யில் இயக்குனர் சிறுத்தை சிவா சறுக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *