கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்

இன்றைய நவீன காலத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவது அரிதான ஒன்றாக உள்ளது. இந்த சூழலில் பிரேசிலில் நூறு வயதை கடந்த முதியவர் ஒருவர் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்திருக்கிறார். இதற்காக அவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடை நிலை ஊழியராக தொடக்கத்தில் பணியாற்றி வந்த வால்டர் ஆர்த்மன் என்பவர், படிப்படியாக முன்னேற்றம் அடைந்து விற்பனை மேலாளராக உயர்ந்தார். நூறு வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றும் வால்டர், பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என்கிறார்.நிறுவனத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது போல, ஆரோக்கியத்திலும் முறையான கவனம் செலுத்துவது அவசியம் என கூறுகிறார். தினசரி உடற்பயிற்சியிலும் ஈடுபட்டுகிறார். தனது அன்றாட பணியை திறம்பட மேற்கொள்ளும் ஒருவரும் கின்னஸ் உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்துள்ளார் வால்டர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *