பாராட்டு விழாவில் லோகேஷ் கனகராஜை புகழ்ந்த பாரதிராஜா

தமிழ் திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குநர் பாரதிராஜாவிற்கு தமிழ் சினிமா திரைப்பட பத்திரிகையாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு தமிழ் சினிமா திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அதன் பிறகு இவ்விழாவில் பேசிய பாரதிராஜா, “டெல்லி முதல் பல மேடையைப் பார்த்து உள்ளேன். ஆனால் இன்று பத்திரிகையாளர்கள் எனக்கு நடத்தும் இந்த நிகழ்வு மிகவும் நெருக்கமான ஒன்று.
அந்தக் காலத்தில் என்னை தவறாக விமர்சித்து ஒரு ஊடகம் எழுதியுள்ளது. அதன் பின்பு நேரில் சென்று அதன் ஆசிரியரை திட்டிவிட்டேன். நான் தற்போது 4 தலைமுறை ஊடகத்தை பார்க்கிறேன், இந்தத் தலைமுறை ஊடக சூழல் மிகவும் நட்பாக மாறி உள்ளது. மேலும் இயக்குநர் லோகேஷ் சின்ன பையன், ஆனால் சாதனையில் பெரிய பையன். நான்கே படத்தில் நான்கு திசையையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டான்.நான் 40 படத்துல பண்ணத லோகேஷ் நாளே படத்துல பண்ணிக் காட்டிட்டான். அவன் மூஞ்ச நான் பார்த்ததில்லை. ஒரே தடவைதான் போன் பண்ணி பேசி இருக்கேன், அதுவும் விக்ரம் படத்தை பார்த்த பிறகுதான். கமல் ஒரு அற்புதமான கலைஞன், சினிமாவில் நிறைய இழந்திருக்கிறான். ஆனால் அது அனைத்தையும் லோகேஷ் கமலுக்கு ஒரே படத்தில் சம்பாதிச்சு கொடுத்துட்டான். அவனிடம் மிகப்பெரிய கலை ஞானம் உள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *